யார் முட்டாள்?

சலூன் கடை காலை வழக்கம் போல இவயங்க ஆரம்பித்தது. ஒரு சிறுவன் கடைக்குள் நுழைந்தான். உடனே கடைக்காரர் வாடிக்கையாளர் காதில் ரகசியமாக “உலகத்திலேயே முட்டாள் இந்தப் பையன் தான்” என்றான்

“எப்படி சொல்கிறாய்?”

“இப்போது பாருங்கள்”

என்று சொல்லி தன் ஒரு கையில் 5 ரூபாய் நாணயமும் இன்னொரு கையில் இரண்டு ஒரு ரூபாய் நாணயங்களையும் வைத்து அச்சிறுவனிடம் “எந்தக் கையில் இருப்பது வேண்டுமோ எடுத்துக் கொள்” என்றான்.

அந்த சிறுவன் உடனே இரண்டு ஒரு ரூபாய்களையும் எடுத்துக்கொண்டு போய் விட்டான். “நான் சொன்னேன் பார்த்தீர்களா?” என்றான் உடனே.

வெளியே வந்த வாடிக்கையாளர் அச்சிறுவன் ஐஸ்கிரீம் சாப்பிடுவதைப் பார்த்தார். அவனிடம் வந்து “ஐந்து ரூபாயை எடுக்காமல் ஏன் இரண்டு ரூபாயை எடுத்தாய்?” என்றார்

அவன் கிளம்பிக்கொண்டே சொன்னான், “ஐந்து ரூபாயை எடுத்தால் அன்றோடு விளையாட்டு முடிந்து விடுமே”

No comments: